நிதியுதவி ஏற்க வேண்டும் – கேரளா முதலமைச்சர்

நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெற மத்திய அரசின் அனுமதி அவசியமானது. இப்போது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார்.  மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும், 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

கேரளாவிற்கான வெளிநாட்டு உதவியை பெறும் விவகாரத்தில் விதிமுறைகளை தளர்த்தும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts