நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவ்டேகர், “நிதி நிறுவன சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் இருக்கும் சிரமங்களைக் குறைப்பதற்கானக் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்வதுதான் இந்த மசோதாவின் நோக்கம் என்று அவர் கூறினார். அதேசமயம், வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் இந்த மசோதாவின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான இந்த மசோதாவை மத்திய அரசு கடந்த 2018 தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியதாகவும், ஆனால், அது காலாவதியாகிவிட்டதாக அவர் கூறினார்.

இந்த மசோதா 2018 மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டதாகவும், தொடர்ந்து நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது வாடிக்கை யாளர்களுக்கான காப்பீட்டை இணைக்குமாறு குழு பரிந்துரைத்த்தாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34 ஆக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச அளவு 34 ஆக அதிகரிக்கும்.

Related Posts