நித்யானந்தா மீது திருட்டு வழக்கு : விசாரணைக்கு திட்டம்

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூல லிங்கத்தை  திருடியதாக நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்யானந்தா மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக  மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும்  நித்யானந்தா,  அண்மையில் யூடியூப் இணையதளத்தில் , சேலம் மேட்டூர் அணைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை, போன ஜென்மத்தில் கட்டியதாகவும் தற்போது அந்த கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் அமைந்துள்ள பாலவாடி கிராம மக்கள் காவல் நிலையத்தில் நித்தியானந்தா மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூல லிங்கத்தை எடுத்து சென்றதை நித்தியானந்தாவே ஒப்புக் கொண்டதால் அவரிடம் இருந்து லிங்கத்தை மீட்டுத்தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சேலம் காவல் காவல்துறையினர் கர்நாடக மாநிலம் பிடதிக்கு சென்று நித்தியானந்தாவை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Related Posts