நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் , கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தீப தரிசனம் .

Want create site? Find Free WordPress Themes and plugins.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான நேற்று மாலை 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள்,அண்ணாமலைக்கு அரோகரா என முழக்கங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர். முன்னதாக. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடந்து மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் ஏராளமான பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை தரிசித்தனர். மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதியை தரிசிக்க முடியும். திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்,சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts