நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான  பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது..  நினைவு இல்லம் அமைப்பதால் ஏற்படும் இடையூறுகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து சுற்றுவட்டார மக்களிடம் கருத்துக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும் பணியில் சமூகப்பணி கல்லூரி ஈடுபட்டுள்ளது.அறிக்கையை வரும் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போயஸ் தோட்டத்தை சுற்றி நோட்டீஸ் ஒட்டப்பட்டு இந்த கூட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. தயார் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் அடிப்படையில் வீடு வீடாகச் சென்று பதில் பெற்று அறிக்கை தயார் செய்யப்படும் என்று சமூகப்பணி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூறுகையில்,போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு வரும் மக்களால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் எனவும்,. அதனால் வேறு இடத்திற்கு மாற்றலாம் எனவும் கூறினர்.

Related Posts