நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு – கேரளாவில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வரும் 1 ஆம் தேதிக்கு பதில் 5 ஆம் தேதி பள்ளிகளை திறக்கும்படி, கேரள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளா : மே-30

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதன் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 1 ஆம் தேதி கேரளாவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஆனால், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வரும் 1 ஆம் பதில் 5 ஆம் பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வரும் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts