நியூட்ரினோவுக்கு எதிராக 5-வது நாளாக வைகோ நடைபயணம்

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 5-வது நாளாக சுட்டெரிக்கும் வெயிலில், நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-04

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

5ஆம் நாள் நடைபயணத்தை தேனியிலிருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, போடேந்திரபுரம், சடையல்பட்டி விலக்கு, காமராஜபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். ச. வாடிப்பட்டி சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அந்த ஊர் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நடைபயணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேரன் வருண் வையாபுரியும் பங்கேற்றார். நடைபயணத்தின்போது, முத்துதேவன்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது, வைகோவிடம் மாணவர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் என்னெற்ற உதவிகளை தான் செய்து வருவதாக தெரிவித்தார்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால், முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அணைகள் உடையும் அபாயம் உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

Related Posts