நியூட்ரினோ எதிர்ப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் : மதிமுக அறிவிப்பு

நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வரும் 18-ந் தேதி நடக்க உள்ளதாக மறுமலரச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (VGFX IN) மதிமுக சார்பில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ந் தேதி மாலை4.00 மணிக்கு மதுரை, அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதே கூட்ட அரங்கில் வரும்19-ந் தேதியன்று காலை10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டங்களில் கழகப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

Related Posts