நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பிரச்சார பயணம் : மதிமுக தலைமை கழகம் வெளியீடு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளதாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தேனி மாவட்டத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல்மற்றும் நீர் நிலைகளை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு  எதிராக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வைகோவுடன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் ராஜப்பா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின்நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர்கம்பம் அப்பாஸ்  ஆகியோரும் பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், , பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டச்செயலாளர் சந்திரன் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts