நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக 6-வது நாளாக நடைபயணம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ   6-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

தேனி : ஏப்ரல்-06

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

6 ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை போடியிலிருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேவாரம் பிரதான சாலை, பி.ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, இராசிங்புரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts