நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான காற்றாலை பண்ணை முடக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில், நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான காற்றாலை பண்ணையை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ராஜஸ்தான் : மே-31

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் போலி உத்தரவாத கடிதங்களை பெற்று, தேசிய வங்கிகளில் 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. அவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யும் முன்பே குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, நீரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து மூன்று குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. மேலும் அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினரும் நீரவ் மோடி வங்கி மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமாக 9.6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை பண்ணையை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.  இதுவரை நிரவ் மோடியின் 691 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts