நிர்மலாதேவிக்கு மே 23ம் தேதிவரை நீதிமன்றக் காவல்

 

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே-23ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி காவல்துறையினர் மற்றும் தமிழக ஆளுநர் நியமனம் செய்த சந்தானம் குழுவினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து. அவர் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்மலாதேவியை மே 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts