நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்ய தடை கோரி வழக்கு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்ய தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை : மே-10

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி காவல்துறையினர் மற்றும் தமிழக ஆளுநர் நியமனம் செய்த சந்தானம் குழுவினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் வரும் 15-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அறிக்கை தர உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்ய தடை கோரி, கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Posts