நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி

 

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த செல்போன் உரையாடல் வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில். சிறையில் உள்ள நிர்மலா தேவியின் சார்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் ராமநாதன், முருகன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கினால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை பாதிக்கப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்று, நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts