நிர்மலா தேவி விவகாரம் – 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினார் சந்தானம் 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக 3-ம் கட்ட விசாரணையை மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி சந்தானம்  தொடங்கினார்.

மதுரை : மே-02

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இன்று 3-ம் கட்ட விசாரணையை மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரி சந்தானம்  தொடங்கினார். முன்னதாக  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக  இன்று அல்லது நாளை மதுரை சிறையில் இருக்கும் முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

Related Posts