நிர்மலா தேவி விவகாரம் – 7 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை : ஏப்ரல்-19

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். முதற்கட்ட விசாரணையை தொடங்குவதற்காக சந்தானம் குழு இன்று மதுரை சென்றது. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், பேராசிரியை விவகாரத்தில் உள்ள பின்னணிகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மதுரை பல்கலைகழகத்திற்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில், 7 மாவட்ட டி.எஸ்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Posts