நிலக்கரியை நீக்கிவிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தும் திட்டம் : இங்கிலாந்தில் முதலமைச்சர்

தமிழகத்தில் நிலக்கரியை நீக்கிவிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தும் திட்டம் பற்றி இங்கிலாந்து நிறுவனத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திட இங்கிலாந்து நாட்டிற்கு ஆகஸ்டு 28-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தில், சபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். அத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் இவங விரிவாக விவாதித்தார்.

இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் எம்.சாய்குமார், பி.செந்தில்குமார் மற்றும் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Posts