நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்ய செயற்கைக்கோளை அனுப்பியது சீனா

 

 

நிலவின் இருண்ட பகுதியை பற்றி ஆய்வு செய்வதற்கான செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்துஇன்று அதிகாலை குயூகியா என்ற புதிய செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் நிலவின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது.  விண்வெளி ஆய்வுகளில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளை 2030 ஆம் ஆண்டுக்குள் பின்னுக்குத்தள்ள சீனா இலக்கு வைத்துள்ளதாக, அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Related Posts