நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயன் 2

Want create site? Find Free WordPress Themes and plugins.

பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயன் 2 சென்றது.

சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட் மூலம் நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இது நிலவில் நீர் இருப்பதையும் கண்டறிந்தது. மொத்தம் 312 நாட்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம் 2009 ஆகஸ்ட் மாதத்துடன் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்தது.

இந்நிலையில், 3 ஆயிரத்து 877 எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 2.21மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்டபடி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுவரை, நிலவின் தென் பகுதியில், எந்த நாட்டின் விண்கலங்களும் தரையிறங்காத நிலையில், அந்த சாதனையை, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts