நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்:  துணை அதிபர் மைக் பென்ஸ் 

நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமை அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார். இந்நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 105 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ள சாட்டிலைட் 2019 என்ற கருத்தரங்கு வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய  மைக் பென்ஸ், அதிபர்  டிரம்பின் வழிகாட்டுதலின்பேரில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும், . அந்த வகையில் நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் நிச்சயமாக அமெரிக்க நாட்டினராகத்தான் இருப்பார்” என்றும் கூறினார்

Related Posts