நீட் தேர்விற்காக பாஜக வின் நிலைப்பாடு மூலம் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எளிதாகிவிட்டது: ப.சிதம்பரம்

நீட் தேர்வு தொடர்பாக பாஜக எடுத்துள்ள நிலைப்பாடு  யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்களும் பெற்றோர்களும் முடிவு எடுப்பதற்கு எளிதாகி விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் அரசு அமைந்தால் நீட் தேர்வு கிடையாது எனவும் பாஜக அரசு அமைந்தால் நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து   சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என தேர்தல் தேதியை அவர் குறிப்பிட்டார். நீட் தேர்வு காரணமாக ‘அனிதா உள்ளிட்ட பல மாணவர்களின் மருத்துவர் கனவுசிதைக்கப்பட்டுள்ளது எனவும் , மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா, அல்லது தனது முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா என மக்களிடம் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts