நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ? : தலைமறைவான மாணவன்

நீட் தேர்வில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவரின் ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி அனுப்பியுள்ளது. ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பதே முறைகேடு புகாருக்கான அடிப்படையாகும். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. புகாருக்குள்ளான மாணவர் சென்னையில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்தபின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்பட வேறுபாடு தொடர்பாக மாணவரின் தாயை தொடர்புகொண்டபோது, அவர் முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

Related Posts