நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றார்.   நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று கூறினார். தேர்தல் ஆணையம் என்பது சுயேச்சையான அமைப்பு என்றும், அதற்குரிய அதிகாரத்தின்படி செயல்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Posts