நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் – மத்திய மனிதவள அமைச்சகம்

நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’  தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக, நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019  மே மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும், எனவும் JEE நுழைவுத்தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts