நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்

நீட் தேர்வு சமூகநீதியை அழித்து, மருத்துவராக வேண்டும் என்ற ஏழை எளிய மாணவர்களின் கனவை தகர்த்துவிட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : மே-05

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் அதை குடியரசுத் தலைவரிடம் அனுப்பியும் கூட ஒப்புதல் கிடைக்கவில்லை எனவும் கூறினார். நீட் எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு, அரசு ஆயிரம் ரூபாய் தந்தாலும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்த வைகோ, புதிதாக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் மனிதாபிமானம் அற்ற செயல் என்று வைகோ குற்றம்சாட்டினார். எல்லா முனைகளிலும் தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவதும், தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதும் மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் இதை பற்றி மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை எனவும் வைகோ புகார் தெரிவித்தார்.

Related Posts