நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் உதவிக்கரம்

 

 

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு மட்டுமின்றி, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், திரைத்துறையினரும் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். 

கேரளாவில் நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு உதவ தங்குமிடம், உணவு உட்பட அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தரஉள்ளதாக  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.ஆலப்புழா, எர்ணாகுளம்,கன்னூர், கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளை நியமித்து அவர்களது தொடர்பு எண்களையும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாக அம்மாநில தமிழ்சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநில தமிழ் சங்க உறுப்பினர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்நீட் தேர்வு எழுத பெற்றோருடன் வரும் தமிழக மாணவர்களை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையங்களிலிருந்து அழைத்து செல்ல தயாராக உள்ளோம்  என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க தயாராக உள்ளோம்  என்று தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில தமிழ் சங்க உறுப்பினர் முருகானந்தம், உதவி கேட்டு இதுவரை 30 பேரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உதவி தேவைப்படுபவர்கள் தமிழ் சங்கத் தலைவர் சவுந்தர நாயகி என்பவரை 08696922117 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதவுள்ள 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தயார்  என்று ட்விட்டரில்  தெரிவித்துள்ள நடிகர் அருள்நிதி, 9841777077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.

நீட் தேர்வு எழுதவுள்ள 2 ஏழை மாணவர்களுக்கு அல்லது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகளை அளிக்கவுள்ளதாக நடிகர் பிரசன்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருவதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஹால் டிக்கெட், பயணவிபரம் வாட்ஸப்-பில் அனுப்பவும் என்று  9789895953 அலைபேசி எண்ணையும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts