நீட் தேர்வு நாளை தொடங்குகிறது:  திருநெல்வேலி தேர்வு மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரைக்கு மாற்றம்

நீட் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற போது தமிழக மாணவர்களுக்கு  வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. குளறுபடிகளால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையும் நேரிட்டது.

இந்தாண்டு தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு  எழுதுகின்றனர். நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தேசிய சோதனை தேர்வு முகமை நேற்று திடீரென மதுரை நகரத்தில் உள்ள 5 மையங்களையும், நெல்லையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மையத்தையும் மாற்றி அமைத்துள்ளது. புதிய ஹால்-டிக்கெட்டை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் டவுன் – லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Related Posts