நீட் தேர்வு வேண்டுமா, இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டிஉ நாள் ஏப்ரல் 18: ப. சிதம்பரம் 

நீட் தேர்வு வேண்டுமா, இல்லை வேண்டாமா என்பது குறித்து இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், நீட்’ தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாக கூறிவிட்டதாகவும், யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது, பாஜக அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு தொடர்ந்து இருக்கும், இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதவிர, மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts