நீட் தேர்வை எழுத எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் :பிரகாஷ் ஜவடேகர்

கடந்த ஞாயிறன்று ஹுப்ளியில் இருந்து மைசூரு சென்ற ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதனால் காலை 7 மணிக்கு வர வேண்டிய ரயில், பிற்பகல் 3 மணிக்கு வந்து சேர்ந்தது. அதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் பரிதவித்தனர்.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜவடேகரின் இந்த நடவடிக்கைக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, ஒடிசாவில் பானி புயலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. , ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறும் எனவும் திருத்தியமைக்கப்பட்ட தேர்வு எழுதவுள்ளோரின் பட்டியலானது விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts