நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தற்போது கருத்து கூற முடியாது

 என்று  தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனின் 160 ஆவது பிறந்த நாளையொட்டி,  சென்னை கிண்டியில் அவரது நினைவாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில்நிறுவப்பட்டுள்ள சிலைக்கு  அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிப்பது அதிமுக மட்டுமே என்றும் கொடி கட்டிய தொண்டனும், இன்று கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில்தான் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்த அமைச்சர்,   சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் திறம்பட செயல்பட்டு அவரை மீட்டுள்ளதாகவும்,  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும்,நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை ஏன் இப்படி வறுத்தெடுக்கிறீர்கள்  என்று  சலித்துக் கொண்டார். மேலும்  நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தற்போது கருத்து கூற முடியாது” என்று  அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

Related Posts