தமிழ்நாடு

நீட் முறைகேடு வழக்கு : திருப்பத்தூர் மாணவர் முகமது இர்பான் தந்தையின் ஜாமின் மனு தள்ளுபடி

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருப்பத்தூர் மாணவர் முகமது இர்பான் தந்தையின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேரந்த மாணவர் முகமது இர்பான் மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்தது. மாணவரின் நலனைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றக் கிளை, முகமது இர்பானுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியுள்ளது. மாணவனின் தந்தை முகமது ஷாபியும் ஜாமின் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு முறைகேடு நடைபெற்றபோது மாணவர் மொரீஷியஸில் இருந்ததாக அரசு தெரிவித்ததால், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதாக தெரிவித்த நீதிபதி, முறைகேட்டுக்கு காரணமான இர்பானின் தந்தை முகமது ஷாபிக்கு ஜாமின் மறுப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags
Show More

Related News

Back to top button
Close