நீதித்துறையை சீர்குலைக்க சதி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் புகார் 

Want create site? Find Free WordPress Themes and plugins.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியதாக இன்று காலை செய்தி வெளியானது. இது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், தன் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.  நீதித்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடைபெறுவதாகவும்

பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியதாக வெளியான செய்தியால் மிகவும் வேதனைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர்,  தம் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது எனவும்,  நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் புகார் கூறியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts