நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்தது தொடர்பாக தங்கதமிழ்ச்செல்வனுக்கு நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்தது தொடர்பாக தங்கதமிழ்ச்செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை : ஜூன்-29

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் தற்போது  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை தங்கதமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, தங்கதமிழ்ச்செல்வனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்தது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது அவரை விமர்சனம் செய்ததற்காக தங்கதமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts