நீதிபோதனை மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடங்கப்படம் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் அடுத்த வாரத்திலிருந்து நீதி போதனை வகுப்புகளும், அடுத்த மாதம் முதல் தற்காப்பு பயிற்சி வகுப்புகளும் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி முழுமையாக தடைசெய்யப்பட்டாலும், வடமாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவதாக தெரிவித்தார். அதனையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் 75 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 7 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் விரைவில் அம்மா ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts