நீதிமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி

நீதிமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ ஆவணமாக பதிவு செய்யவும் உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. நேரடி ஒளிபரப்பு செய்வதில் தங்களுக்கு எந்த சிரமமும் இல்லை எனவும், இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Posts