நீர் வரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்ல தடை : ஆர்.பி. உதயகுமார்

 நீர் வரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

      காவேரி ஆற்றின் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றும் விவரம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 126 கன அடியும், பவானிசாகர் அணையில் 5 ஆயிரத்து 458 கன அடியும்,வெளியேற்றப்படுவதாக தெரிவித்தார். மேலும் அமராவதி அணையில் இருந்து ஆயிரத்து 290 கன அடியும், பெரியாறு அணையில் இருந்து 2 ஆயிரத்து 206 கன அடியும் மற்றும் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 367கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஈரோடு திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 595 மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 43வட்டங்களில் உள்ள 186 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இரண்டு ஆண் ஒரு பெண் உட்பட 3 பேர் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 954 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கூறிய அமைச்சர்,  7ஆயிரத்து 167 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். நீர் வரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்லவும் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.தமிழகத்தில் பெய்யவிருக்கும் பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts