நீர் வளத்தை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு, திருச்சி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார்

திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி , மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் தமிழகம், இந்தியாவிலேயே சுகாதாரத் திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.

வேளாண்மைக்கு உயிராக இருக்கும் நீர் வளத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அதற்கான திட்டங்களை விளக்கிப் பேசினார்.

Related Posts