நீலகிரி கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம் , மலுமிச்சம்பட்டி, துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கோவை மாநகர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் பாய்வதால்  பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை சார்ந்த பகுதிகள் ரம்மியமாக காட்சி தருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

Related Posts