நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும்

நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

             இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இந்த நன்நாளில்,நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால், நவீன நாகரீகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புறக் கைவினைஞர்களால் புதிய யுக்திகளுடன் தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள 88 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கிராமப்புற ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்திட வேண்டுமெனஅந்த அறிக்கையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்

Related Posts