நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை தொடர்பாகமுதலமைச்சர் ஆலோசனை

சட்டப்பேரவை கூட்டத் தொடர்  வரும் 28ஆம் தேதி கூடும் நிலையில், மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கான பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

கொள்கை விளக்க குறிப்புகள் மற்றும் புதிய அறிவிப்புகளை இறுதி செய்வது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், முதலமைச்சர் தன் வசம் உள்ள நெடுஞ்சாலை துறை தொடர்பாக, தலைமை செயலகத்தில் இன்றுஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை,ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்

Related Posts