நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது

.காரைக்காலில் இருந்து கடந்த 3ம் தேதியன்று மூன்று படகுகளில் 18 மீனவர்கள்  கடலுக்கு சென்றனர்.  நேற்றுநள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 18மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களுடைய 3 படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர்.  18 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்டசம்பவம் காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 18 மீனவர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் விடுவிக்கவும்.  படகுகளையும் மீட்டுத்தரவும் மத்திய, மாநில அரசுகளுக்கு காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 18 மீனவர்களும் 2 அல்லது 3 மாதங்களில் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் மூன்று படகுகள் விடுவிக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

Related Posts