நெடுந்தீவு அருகே கைதுசெய்யப்பட்ட 11 மீனவர்கள் கைது; இலங்கை நீதிமன்றம் உத்தரவு !

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளப்பர், பால்ராஜ், செல்வம் உள்ளிட்ட 11 மீனவர்கள், கடந்த மாதம் 24ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 தமிழக மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 11 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 11 மீனவர்களும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts