நெருப்புப் பிழம்பை சீற்றத்தோடு வெளியேற்றும் ஸ்ட்ரோம்போலி எரிமலை

இத்தாலியில் புகையை மட்டும் கக்கி வந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை, நெருப்புப் பிழம்பை சீற்றத்தோடு வெளியேற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரிருளில் விண்ணை நோக்கி பல அடி உயரத்துக்கு சீறிப் பாய்ந்து லாவா குழம்புகள் தெறிக்கின்றன. மலையில் இறங்கி வரும் போது நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டுத் சிதறுவதை சுற்றுலாப் பயணிகள் சிலர் அச்சம் கலந்து ஆச்சர்யத்தோடு புகைப்படம் எடுக்கின்றனர். 1932-ம் ஆண்டு முதல் அவ்வப்போது சீறி வரும் ஸ்ட்ரோம்போலி எரிமலை, இரு தினங்களாக, புகையையும், சாம்பலையும் மட்டும் வெளியேற்றி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்புப் பிழம்புகள் வெளிப்பட்டு அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது.

Related Posts