நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருநெல்வேலி : ஜூன்-27

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 19ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நெல்லையப்பர் காந்திமதி உருவச் சிலைகள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துக்குப் பின், தனித்தனித் தேர்களில் வைக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். ஆனித் தேரோட்டத்தை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தையொட்டி, நெல்லையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts