நெல்லையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சந்தோஷ் வித்யாலயா பள்ளி வெற்றி

நெல்லையில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சந்தோஷ் வித்யாலயா பள்ளி வெற்றி பெற்றது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் நோவா கார்பன் நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 16 ஆண்கள் அணியினர் கலந்து கொண்டனர்.  இந்த ஆட்டத்தின் இறுதி போட்டியில் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியும், சந்தோஷ் வித்தியாலய பள்ளியும்  மோதின.  பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சந்தோஷ் வித்யாலயா பள்ளி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் சேவியர் பள்ளியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Posts