நெல்லை அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

நெல்லை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் தனது நண்பருடன் காரில் ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts