நெல்லை காவலர் கொலை வழக்கில் ஒருவர் சரண்

 

 

நெல்லையில் மணல்  கொள்ளையை தடுக்க முயன்றபோது காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில், சரணடைந்த அமிதாப்பச்சனுக்கு வருகிற 14ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலரான ஜெகதீசன், கடந்த வாரம் நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றார். 

அப்போது, மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது. இதுகுறித்து, மணிகண்டன், முருகப்பெருமாள் என்ற இருவர் கைதான நிலையில், மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர்.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தாமரைக்குளத்தைச் சேர்ந்த 27 வயதான அமிதாப்பச்சன் என்பவர், நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்தாஸ் முன்னிலையில் இன்று சரணடைந்தார். அவரை, வரும் 14 –ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அமிதாப்பச்சன்  பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Posts