நெல்லை கொலை வழக்கில் 3 தனிப்படைகள் – காவல் ஆணையர் பாஸ்கரன் தெரிவிப்பு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் நெல்லை மாநகர மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. நேற்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்தஅடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையின் முக்கிய பகுதியில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக 3  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகநெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Related Posts