நெல்லை மாணவர்கள் நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்தில் மையம்: வைகோ கடும் கண்டனம்

 

 

நெல்லை மாணவர்கள் நீட் தேர்வு எழுத, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி, ஏப்ரல்-20

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது, மணமக்கள் பல்லாண்டு காலம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வைகோ வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு எழுத நெல்லை மாணவர்களுக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் போடப்பட்டது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிபிஐ விசாரணை தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

Related Posts