நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி

மறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் , பிரமுகர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
சென்னையில் உடல் நலக்குறைவால் நெல் ஜெயராமன் நேற்று காலை சென்னையில் காலமானார் அவரது உடலுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் நேற்று நண்பகல் சென்னையில்ருந்து நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடுவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல்ஜெயராமன் உடலிற்கு திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிக்கலைவாணன் மற்றும் அண்ணாதிராவிடர் கழகப் பொதுசெயலாளர் திவாகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
நெல் ஜெயராமன் நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடினார். இவர் 174 அரியவகைநெல் விதைகளைசேகரித்ததுடன் மரபணுமாற்ற திட்டங்களையும் எதிர்த்தார். பாரம்பரியநெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநிலவிருதுகளை பெற்றுள்ளார். இறப்பதற்கு முன் கடைசியாக பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் நெல் ரகங்கள் இருக்கலாம் எனவும், தன்னுடைய நம்பிக்கை என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தவிதைகளையெல்லாம் மீட்டெடுத்தால் அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலை நிமிர்ந்து விடுவார்கள்என்றார். அதோடு தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவை சாப்பிடுவார்கள் என்றார் நெல் ஜெயராமன்.
நெல் ஜெயராமனின் உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.